2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

36 ஆவது டெஸ்ட் சதம் குவித்தார் திராவிட்

Super User   / 2011 நவம்பர் 14 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டமுடிவின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 346 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கொல்கத்தாவில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌதம் காம்பீர் 65 ஓட்டங்களுடனும் வீரேந்தர் ஷேவாக் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ராகுல் திராவிட் 119 ஓட்டங்களைப் பெற்றார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர்பெற்ற  36 ஆவது சதமாகும். இவ்வருடத்தில் அவர் பெற்ற  5 ஆவது டெஸ்ட் சதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தனது 100 ஆவது சர்வதேச சதத்திற்காக காத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் பிடெல் எட்வர்ட், டெரன் சமி, கெமர் ரூச், தேவேந்திர பிஷு, கிறேக் பிராத்வைட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
 


You May Also Like

  Comments - 0

  • Dilan Monday, 14 November 2011 11:08 PM

    ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சாதிக்கும் வீரர் ராகுல் திராவிட். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு பொக்கிசம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .