2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அவ்ரிடியின் அதிரடியில் வீழ்ந்தது இலங்கை; ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வெற்றி

Super User   / 2011 நவம்பர் 20 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

சார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி  49.3 ஓவர்களில் 200 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  45.2 ஓவர்களில் 174 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் பாகிஸ்தான் அணி தனதாக்கியயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பாகிஸ்தான் அணி 3-1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 7 ஆவது விக்கெட்டை இழந்தது. எனினும் 7 ஆவது வரிசை வீரர் சஹீட் அவ்ரிடி 65  பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பெண்டரிகள் உட்பட 75 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கைப் பந்துவீச்சாளர்களில் தில்ஹார பெர்னாண்டோ 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

201 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில்  குமார் சங்கக்கார 58 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 55 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் இலங்கை அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 19 ஓட்டங்கள் இடைவெளியில் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சிலும் பிரகாசித்த அவ்ரிடி 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காராக சஹீட் அவ்ரிடி தெரிவானார். 5 ஆவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை அபுதாபியில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Rauf Monday, 21 November 2011 06:37 AM

    Ha... ha.... Still are you willing to wait, ha.... ha.... Under Dilshan CaptainShip Sri lankan Team never take TEA CUP also. See the history, Since he get the leader Ship, from england and till now he does not have any performance, he is good player but our Sri lankan Club gave the captainship for him to reduce the performance.

    Reply : 0       0

    haleemraja Monday, 21 November 2011 08:30 AM

    அவன் விளையாடிட்டே பொறந்தானா இல்ல விளையாடுறதுக்கே பொறந்தானா?

    Reply : 0       0

    pasha Monday, 21 November 2011 02:57 PM

    Rauf, donot criticise dilshan for every thing. srilanka lost purely because of pakistani player's great bowling and batting. accept the defeat and praise the good performance of pakistan without finding excuse for the loss.

    Reply : 0       0

    moon Monday, 21 November 2011 05:15 PM

    முதலில் தில்ஷான் பதவியை கொடுக்கணும். அப்போதுதான் இலங்கை அணி வெல்ல வாய்ப்புண்டு .தினேஷ் சந்திமால் ஒன்றுக்கும் ஒதவாத நபர். வெல்ல வேண்டிய போட்டியை நழுவ விட்டது ஏன் ?அணியின் வலி நடத்தல் சரி இல்லை. இதுவரை தில்ஷான் தலைமையில் எத்தனை போட்டிகள் கை நழுவி பொய் இருக்கு? இனியாவது கொஞ்சம் நிதானமான வகையில் பெட்டிங் ஒர்டர்களை சரி செய்தால்தான் வெற்றி பெற வாய்ப்புண்டு.

    Reply : 0       0

    Rauf Monday, 21 November 2011 10:12 PM

    Dear Pasha,
    I am a Dilshan fan, I am not angry with him, when he got the captain ship he so confuse, see his performance after captain ship and before, that is why, why we want make bad record for him. Even Pakistan good performance but Sri Lankan Team also have best performance, but nowadays they are not strong by mentality, they feel afraid. It will be Ok soon.

    Reply : 0       0

    janoovar Tuesday, 22 November 2011 04:21 AM

    please bring your luggage to sri lanka.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .