2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். தடகளப் போட்டிகளில் புதிய 4 சாதனைகள்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன், யாழ். மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே நடத்திய ஆண்கள் பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் 33 வருடங்களுக்கு முந்திய சாதனை உட்பட நான்கு புதிய சாதனைகள் நேற்று சனிக்கிழமை நடை பெற்ற போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் மூன்று சானைகளும் பெண்கள் பிரிவில் ஒரு சாதனையும் முறியடிக்கப்பட்டதுடன் கடந்த கால சாதனைகள் இரண்டு சமப்படுத்தப்பட்டும் உள்ளன.

 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில்
ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த என்.நிசாந்த, 13.60 மீற்றர் தூரம் பாய்ந்து  புதிய சாதனையை ஏற்படுத்தியதன் மூலம் 1977ஆம் ஆண்டு கரவெட்டி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆர்.இராஜசேகரம், 13.56 மீற்றர் பாய்ந்து  ஏற்படுத்திய சாதனை 33 வருடங்களின் பின்னர்  முறியடிக்கப்பட்டுள்ளது.  
 
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ்.வாகீசன், 51.95 மீற்றர் தூரம் எறிந்து புதியசாதனையைஏற்படுத்தியதன் மூலம் 2003 ஆம் ஆண்டு உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி. பகீரதன் 49.62 மீற்றர் எறிந்து ஏற்படுத்தியசாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் சண்டிலிப்பாய்  பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எ.ரஜீம்ராஜ், 7.00 மீற்றர் தூரம் பாய்ந்து  புதிய சாதனையை ஏற்படுத்தியதன் மூலம் 2002 ஆம் ஆண்டு தெல்லிப்பளை  பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி. ரஞ்சித்குமார், 6.71 மீற்றர் பாயந்து ஏற்படுத்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த ரி.மோகுநாத், 3.40 மீற்றர் தூரம் பாய்ந்து 2002ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஏற்படுத்திய சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வி.கஜிதா, 1.61  மீற்றர் தூரம் பாய்ந்து  சாதனையை ஏற்படுத்தியதன் மூலம் 2002ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சேந்தினி, 1.55  மீற்றர் பாய்ந்து  ஏற்படுத்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான முப்பாய்ச்சல்; போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ்.கீர்த்திகா, 10.24 மீற்றர் தூரம் பாய்ந்து 2005ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எ.பௌத்திரா ஏற்படுத்திய சாதனையை சமப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .