2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையுடனான 5 ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அபுதாபியில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஐந்தாவது ஒருநாள்  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளால்  வெற்றியீட்டியுள்ளது. இச்சுற்றுப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி 4-1 விகிதத்தில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றது. 

குமார் சங்கக்கார 78 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்திவ்ஸ்  61 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களில் சொஹைல் தன்வீர் 34 ஓட்டங்களுககு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து  வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் மிஸ்ப உல் ஹக் 66 ஓட்டங்களையும் கம்ரன் அக்மல் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் ஜீவன் மெண்டிஸ் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், தில்ஹார பெர்னாண்டோ 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஏஞ்சலோ மத்திவ்ஸ் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்,  லஷித் மாலிங்க 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்  வீழ்த்தினர்.


 


You May Also Like

  Comments - 0

  • Ramesh Thursday, 24 November 2011 06:01 AM

    நாட்டில் குண்டு வெடிப்புகள், இதனால் வெளிநாட்டு அணிகள் நாட்டுக்கு விஜயம் செய்ய மறுப்பு, சூதாட்ட சர்ச்சைகள் பல மாதங்கள் சர்வதேச போட்டி வாய்ப்பே இல்லாத நிலை இவ்வளவுக்கும் மத்தியில் பாகிஸ்தான் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

    Reply : 0       0

    Regan Thursday, 24 November 2011 02:02 PM

    வாழ்த்துக்கள் ....

    நான் பாகிஸ்தான் அணிக்கு சொன்னேன் :-)

    Reply : 0       0

    pasha Thursday, 24 November 2011 02:09 PM

    well done Pakistan congratulation.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .