2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிம்பாவேக்கு எதிரான 5ஆவது போட்டியிலும் இந்தியா வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாவேக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் சிம்பாவே அணிக்குமிடையிலான 5 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடரின் 5ஆவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

புலவாயோவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 39.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
முதலாவது விக்கெட்டை 13 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

அத்தோடு, அமித் மிஷ்ராவின் சுழற்பந்துவீச்சில் அவ்வணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தது.

துடுப்பாட்டத்தில் சிம்பாவே அணி சார்பாக சியன் வில்லியம்ஸ் 65 பந்துகளில் 51 ஓட்டங்களையும் ஹமில்ற்றன் மஸகட்ஸா 46 பந்துகளில் 32 ஓட்டங்களையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அமித் மிஷ்ரா 8.5 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் மோகித் சர்மா, ஜெய்தேவ் உனத்கட், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

164 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 34 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டாக செற்றேஸ்வர் புஜாராவை முதலாவது ஓவரிலேயே இழந்த அவ்வணி, ஷீகர் தவானை 55 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதும் இழந்தது. எனினும் அதன் பின்னர் இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டு வெற்றி பெறப்பட்டிருந்தது,

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அஜின்கியா ரஹானே 66 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 77 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் ஷீகர் தவான் 38 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிம்பாவே அணி சார்பாக கைல் ஜார்விஸ் 8 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் மல்கொம் வோலர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக அமித் மிஷ்ரா தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 5  - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .