2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய அணிக்கு 5 விக்கெட் வெற்றி

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 16 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் 2 ஆவது விக்கெட்டை இழந்தது. அதன்பின் அணித்தலைவர் மைக்கல் கிளார்க்கும் (101) மைக் ஹஸியும் (69) இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களைக்குவித்தனர். கேமரூன் வைட் 49 பந்துவீச்சுளில் 89 ஓட்டங்களைக் குவித்தார்.
 

அவுஸ்திரேலிய அணி இறுதி 5 ஓவர்களில் 84 ஓட்டங்களை விளாசியது.இதனால் 50 ஓவர்களில் அவ்வணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் சிங்கார் தவான் ஓட்டமெதுவும் பெறாமலும் முரளி விஜய் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும் விராட் கோலி 118 ஓட்டங்களையும் யுவராஜ் சிங் 58 ஓட்டங்களையும் பெற்று அணியை பலப்படுத்தினர்.

அணித்தலைவர் டோனி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். எனினும் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 71ஓட்டங்களையும்  மற்றொரு அறிமுக வீரான சௌருப் திவாரி 12 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இந்திய அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் கிளைன்ட் மெக்கி 3 விக்கெட்டுகளையும் அறிமுக வீரர் ஹோன் ஹாஸ்டிங்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .