2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் 7 டுவென்டி டுவென்டி போட்டிகளில் கென்யா

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள கென்ய அணி, இலங்கை "ஏ" அணிக்கெதிராக 7 டுவென்டி டுவென்டி போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. இதற்கான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ளது.
 
கென்ய அணி உலக டுவென்டி டுவென்டி தொடரின் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில் அவ்வணிக்கான பயிற்சிகளாகவும், இலங்கை வீரர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ள இத்தொடரில் இலங்கை "ஏ" அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.
 
கென்ய அணி சார்பாக 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தோடு ஓய்வுபெற்ற அவ்வணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ரிக்கலோ தனது ஓய்விலிருந்து வெளியே வந்து, இத்தொடரிலும், உலக டுவென்டி டுவென்டி தகுதிகாண் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார்.
 
போட்டி அட்டவணை:
 
முதலாவது போட்டி: ஒக்டோபர் 27 - பிற்பகல் 2.15 - என்.சி.சி மைதானம்
இரண்டாவது போட்டி: ஒக்டோபர் 29: காலை 9.45 - என்.சி.சி மைதானம்
மூன்றாவது போட்டி: ஒக்டோபர் 29: பிற்பகல் 2.15 - என்.சி.சி மைதானம்
நான்காவது போட்டி: ஒக்டோபர் 31: காலை 9.45 - சி.சி.சி மைதானம்
ஐந்தாவது போட்டி: ஒக்டோபர் 31: பிற்பகல் 2.15 - சி.சி.சி மைதானம்
ஆறாவது போட்டி: நவம்பர் 2: காலை 9.45 - என்.சி.சி மைதானம்
ஏழாவது போட்டி: நவம்பர் 2: பிற்பகல் 2.15 - என்.சி.சி மைதானம்
 
தொடருக்கான குழாம்கள்:
 
கென்யா: கொலின் ஒபுயா, றாகெப் பட்டேல், மொறிஸ் ஒனுமா, நஹேமியா ஒடியம்போ, ஹிரேன் வரய்யா, ஷெம் கோச்சே, ஸ்டீவ் ரிக்கலோ, றாகெப் அகா, நெல்வன் ஒடியம்போ, எலியா ஒட்டினோ, திரேன் கோன்டாரியா, தோமஸ் ஒடோயோ, குர்தீப் சிங், எமானுவேல் புண்டி, டங்கன் அலன், இர்பான் கரிம்
 
இலங்கை "ஏ": டினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன, குசால் ஜனித் பெரேரா, மஹேல உடவத்த, ஷெஹான் ஜெயசூரிய, உபுல் தரங்க, அஷன் பிரியஞ்சன, கித்துருவன் விதானகே, அஞ்சலோ பெரேரா, தனுஷ்க குணதிலக, யசோதா லங்கா, நிரோஷன் டிக்வெல்ல, றமிம் றம்புக்வெல்ல, சத்துரங்க டீ சில்வா, அகில தனஞ்சய, சீக்குகே பிரசன்ன, மிலிந்த சிரிவர்தன, இசுரு உதான, இஷான்ஜெயரத்ன, கோசல குலசேகர, லஹிரு ஜெயரத்ன, டில்ஹார லொக்குஹெட்டிகே, ஜீவன் மென்டிஸ், ஷமின்ட எரங்க

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .