2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உயிரிழப்பு 13ஆக அதிகரிப்பு; ஒரு இலட்சம் பேர் பாதிப்பு

Editorial   / 2018 மே 24 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை சீற்றத்தால் இதுவரை 14 மாவட்டங்களைச் சேர்ந்த 27,064 குடும்பங்களைச் சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

இயற்கை அனரர்த்தங்களால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.  எவ்வாறெனினும்  மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஆகவே உயிரிழப்பு 13ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் - கல்பிட்டிய பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஹொரன பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் மேகமூட்டமான வானமும் நேற்றிரவிலிருந்து, சற்று அதிகரித்துக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X