2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாட்டுக்குள் நுழைய முடியாத 14 ​பேரின் விவரங்கள்

Editorial   / 2018 ஜூன் 22 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்   

புலம்பெயர்ந்துள்ள தமிழர்களில், மேலும் 14 பேரை நாட்டுக்குள் நுழைவதற்கு, பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளது.   

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகள், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் மற்றும் இன்டர்போல் சிவப்பு அறிக்கை ஆகியனவற்றை அடிப்படையாக வைத்தே இந்த 14 பேரும், அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.   

ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளின் 4(7)ஆம் ஒழுங்கு விதியின் கீழ் பெயர் குறிப்பிட்ட ஆட்கள் பற்றிய நிரலுக்கான திருத்தத்தில் அந்த 14 பேர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.   

பாதுகாப்பு அமைச்சின் தகுதிவாய்ந்த அதிகாரி, ஜனாதிபதி சட்டத்தரணி, கபில வைத்தியரத்னவால் கையொப்பமிடப்பட்டு, அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.   

அந்தப் பட்டியலில், 

1. நடராஜா சத்தியசீலன் - யாழ்ப்பாணம், கச்சேரி வீதி, நல்லூர்  
2. கமலசிங்கம் அருணகுலசிங்கம் - இல.55, ஒபேரிய கொச்சிக்கடை  
3. என்டனிராசா என்டனி கெலிஸ்டார் - இல.07, வீடமைப்புத் திட்டம், சிலா தோட்டம், முல்லைத்தீவு.  
4. சிவசுப்ரமணியம் ஜெயகணேஷ் - வெலகம், தர்மபுரம் - பரந்தன்.  
5. பொன்னசாமி பாஸ்கரன் - சோனபுரி, அடம்பன், மன்னார், மட்டக்களப்பு, பெரியகல்லாறு.  
6. வேலாயுதன் பிரதீப்குமார்- 126/7 கிறீன் வீதி, திருகோணமலை, இல.18/18, இணைவல்லு இல்லம், வல்லிபுரம், முல்லைத்தீவு.  
7. சிவராசா சுரேந்திரன் - நவம்புமிதேவிபுரம், வல்லிபுரம், முல்லைத்தீவு.  
8. சிவகுருநாதன் முருகதாஸ் - கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.  
9. திருநீலகண்டன் நகுலேஸ்வரன் - இல.33 கிரஞ்சி, சிவபுரம், புனரின், கிளிநொச்சி.  
10. மகேஷ்வரன் ரவிச்சந்திரன் - இல.248, பாதிபுரம் வீதி, விவேகானந்த நகர், கிளிநொச்சி அல்லது இல.160, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.   
11. சுரேஷ் குமார் பிரதீபன் - மின்சார சபை வீதி, சுன்னாகம் வடக்கு, யாழ்ப்பாணம்.   
12. கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி - புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்.  
13. ஜீவரத்னம் ஜீவகுமார் - மண்டுவில் புதுக்குடியிருப்பு, இல.246 பீ. விவேனானந்த மாவத்தை கொழும்பு-12.  
14. டோனி ஜியான் முருகேசபிள்ளை: கிடைக்கவில்லை.  
ஆகியோரின் பெயர்களே இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட “தனி ஆட்கள்” என்ற தலைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இ​தேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, உலகத் தமிழர் இயக்கம். நாடு கடந்த தமிழீ​ழ அரசு, உலக தமிழீ​ழ மக்கள் அவை, உலக தமிழர் நிவாரண நிதியம் மற்றும் தலைமையகக் குழு ஆகிய எட்டு அமைப்புகளும் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .