2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் ரவி

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருநாணாயக்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றில் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

"நான் வர்த்தகத் துறையில் ஈடுபடும் ஒருவன். அரசியலுக்காக என்னுடைய பணத்தை இழந்திருக்கிறேனே தவிர, அரசியல் ஊடாக ஒருபோதும் பணம் சம்பாதித்தது கிடையாது. சட்ட விரோதமாக வீடொன்றைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் எனக்குக் கிடையாது.

நாம் சட்டத்துக்கும் நீதிக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால்தான் புதிய அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்தும் முகமாக பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தேன். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் விசாரணை என்ற பெயருக்கே இடமிருக்கவில்லை என்பதை நாம் அறிவோம்.

என் முன்னால் உள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய சக்தி எனக்கு உண்டு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லாட்சியை குழப்புவதற்கு பலர் முயற்சித்து வருகிறார்கள். அதற்கு இடமளிக்க முடியாது" என்றார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியை இல்லாதொழிக்க பலர் முயற்சித்து வருவதாக தெரிவித்த ரவி கருணாநாயக்க, கட்சியின் தனித்துவத்தைக் காப்பதற்காகவும் நல்லாட்சியில் முன்னுதாரணமாக செயற்படும் வகையிலும் பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினராக பின்வரிசையில் அமர்ந்தார்.


தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் ரவி, இன்று விசேட உரை

ரவி கருணாநாயக்க ராஜினாமா செய்வார்

மூவரும் சந்தித்துப் பேச்சு

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி

ரவி பங்கேற்கவும் இல்லை; அது பற்றிப் பேசவும் இல்லை

‘சத்தமிடுவது ஏன்’

‘உள்வாங்கியிருக்க வேண்டும்’

‘அப்பாற்பட்ட விடயமாகும்’

செய்திகளில் உண்மையில்லை

’ரவி விலக வேண்டும்’
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .