2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஏன் இந்த ஆர்வம்? எனக்கு புரியவில்லை’

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என பாதுகாப்ப அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“மகாநாயக்க தேரரின் கருத்தை எவரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை, அது எல்லாவற்றுக்கும் மேல் நான் ஒரு சாதாரண மனிதன். அவ்வளவு பெறுமதியானவன் அல்ல. எனக்கு தனியாக வழங்கப்பட்ட ஆலோசனைகளை ஏன் விமர்சனம் செய்கின்றனர் என எனக்கு புரியவில்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 “மகாநாயக்க தேரர், எனக்கு வழங்கிய ஆலோசனையை, ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட இன்னும் பல அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர். அப்படியாயின், அவ்வளவுக்கு நான் பெரியவனா? இல்லை, நான் சாதாரண மனிதன்” என்றார்.

இந்நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ என்னிடம் கேட்டுக்கொள்வில்லை. அப்படி கோரிக்கை விடுக்கப்படுமாயின், இரண்டு அல்லது மூன்று மாதங்களில், அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் என்னால் இரத்து செய்துகொள்ள முடியும்” எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X