2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மஸ்தானிடமிருந்து நீங்கியது இந்துமத விவகாரம்

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தானிடமிருந்து, இந்துமத விவகாரப் பிரதியமைச்சுப் பதவி நீக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், ஜனாதிபதிச் செயலகத்தில்,  சற்றுமுன்னர் இடம்பெற்ற ​பேச்சுவார்த்தையின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென, வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடகச் செயலாளர் துமிந்த பண்டார தெரிவித்தார்.

பிந்திய செய்தி...

ஜனாதிபதியுடனான பேச்சு தொடங்கியது

பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், ஜனாதிபதிச் செயலகத்தில், தற்போது பேச்சுவார்த்தையொன்று நடைபெற்று வருகின்றது.

பிந்திய செய்தி...

பதவி விலகுகிறார் மஸ்தான்?

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில், இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், அவர் இந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரெனத், தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை நியமிக்கும் போது, இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் எம்.பி நியமிக்கப்பட்டார். இதனால், தமிழ் அரசியலில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளைத் தொடர்ந்து, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்துமத விவகாரப் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமான செய்துவிட்டு, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கான பிரதியமைச்சுக்கு, மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் ​தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .