2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீள அறிவிக்கும் வரை யாழில் ஊடரங்கு

Editorial   / 2020 மார்ச் 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 6 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வரும்.

பின்னர், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா நோய்க்கிருமி தொற்று பரவும் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .