2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

திறப்பு விழா....

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையாக புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தங்க விதானத்தை (ரன் வியன)  திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (26) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

அஸ்கிரிய  மல்வத்தை மகா நாயக்க தேரர்கள் மற்றும் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயின் கோரிக்கையின் பேரில் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி அலுவலகத்தின் ஏற்பாடுகளின் கீழ் இந்த தங்க விதானத்தை புனர் நிர்மாணம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

3450 சதுர அடி கொண்ட தங்க விதானத்தை புனர் நிர்மாணம் செய்வதற்காக 45 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் 1987ஆம் ஆண்டு தலதா மாளிகைக்கு இந்த தங்க விதானம் பூஜை செய்யப்பட்டதுடன், மூன்று தசாப்த காலமாக தலதா மாளிகைக்கு நிழல் கொடுத்த இந்த தங்க விதானம் 16 வருடங்களுக்கு பின்னர், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .