2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

​மஸ்கெலியாவில் 13 வீடுகள் எரிந்து நாசம்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் ஸ்காப்ரோ பிரிவில், இன்று (20) காலை 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 13 தொழிலாளர்களின் குடியிறுப்பு, முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன.

இதனால், 13 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன், அயலவர்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயன்றதாகவும் எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமையால், மஸ்கெலியா பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து, சுமார் 1 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தனர்.

குறித்த வீடுகளில் இருந்த சில பொருள்களை மீட்டதாகவும் எனினும் பெருமதியான பல பொருள்கள் எரிந்து நாசமடைந்து விட்டது என்றும் தெரியவருகின்றது

இந்த லயன் ​தொகுதியில், மொத்தம் 24 வீடுகள் உள்ளன. எனினும், 13 வீடுகள் தற்போது முற்றாக எரிந்துள்ளமையால், பாதிக்கப்பட்ட 57 பேரும் தற்காலிகமாக, தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், மஸ்கெலியா பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார், ஹட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .