2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருமலையில் தேசிய கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து நடத்தும் 15 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரின் இறுதிச் சுற்று திருமலையில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது.

வலய, மாவட்ட ரீதியில் போட்டிகள் நடத்தப்ப்பட்டு அதில் வெற்றி பெற்ற பாடசாலைகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகின.

திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு  இறுதிச் சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

21 பாடசாலைகள் அணிகள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு இதில் கலந்து கொள்கின்றன.

கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா ஆகியோர் ஆரம்ப வைபவத்தில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
 
இப்போட்டித் தொடரில் பங்கு கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்குதலில் மரணமாண கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் நிகார் நிஹ்ழார் இன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .