2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அத்லெட்டிகோ மட்ரிட்டை வென்றது பார்சிலோனா

Editorial   / 2018 மார்ச் 05 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட்டை பார்சிலோனா வென்றது.

இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கிடைத்த பிறீ கிக்கை லியனல் மெஸ்ஸி கோலாக்க, அக்கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. குறித்த கோல், லியனல் மெஸ்ஸி தனது விளையாடும் காலத்தில் பெற்ற 600ஆவது கோலாகும்.

இப்போட்டியின் முடிவைத் தொடர்ந்து, லா லிகா புள்ளிகள் பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனா காணப்படுவதுடன், பார்சிலோனாவை விட எட்டுப் புள்ளிகள் குறைவாக 61 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. 54 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது.

அந்தவகையில், இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் லா லிகா தொடரில் பார்சிலோனா இம்முறை சம்பியனாவதை ஏறத்தாழ உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது என்றே கருதப்படுகிறது.

ஏனெனில், இன்னும் 11 போட்டிகளே மீதமிருக்கையில், பார்சிலோனா சம்பியன் இல்லாமற் போவதற்கு, எஞ்சியுள்ள 11 போட்டிகளில் மூன்றில் பார்சிலோனா தோற்க வேண்டும் என்பதுடன் 11 போட்டிகளையும் அத்லெட்டிகோ மட்ரிட் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்லெட்டிகோ மட்ரிட்டின் 11 போட்டிகளில், லா லிகா தொடரின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டை அவ்வணியின் மைதானத்தில் எதிர்கொள்ளும் போட்டியும் உள்ளடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நடப்பு லா லிகா பருவகாலத்தில் இதுவரை பார்சிலோனா தோல்வியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .