2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்று சம்பியனானது பாகிஸ்தான்

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் சம்பியனானது. ஹராரேயில் இன்று இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவை வென்றே பாகிஸ்தான் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டார்சி ஷோர்ட் 76 (53), ஆரோன் பின்ஞ் 47 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஆமிர் 3, ஷடாப் கான் 2, ஷகீன் ஷா அப்ரிடி, ஹஸன் அலி, பாஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு, 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு பக்கர் ஸமனின் அதிரடித் துடுப்பாட்டம் கைகொடுக்க 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியனாகியது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் 91 (46), ஷொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 43 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிளென் மக்ஸ்வெல் 2, ஜஹை றிச்சர்ட்ஸன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .