2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானை வென்றது ஸ்கொட்லாந்து

Editorial   / 2018 மார்ச் 05 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகள், சிம்பாப்வேயில் நேற்று ஆரம்பித்த நிலையில் அன்று இடம்பெற்ற போட்டிகளில், ஸ்கொட்லாந்து, சிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் வென்றன.

ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே புலவாயோவில் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்டுகளால் ஸ்கொட்லாந்து வென்றிருந்தது. இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிகுக்குத் தலைமை தாங்கிய 19 வயதும் 165 நாட்களுமுடைய ரஷீட் கான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய இளையவராக தனது பெயரை பதிந்து கொண்டார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஸ்கொட்லாந்து

ஆப்கானிஸ்தான்: 255/10 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நபி 92 (82), நஜிபுல்லா ஸட்ரான் 67 (69) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறட் வேல் 3/36, றிச்சி பெரிங்டன் 3/42, ஸபயான் ஷரிப் 2/46)

ஸ்கொட்லாந்து: 256/3 (47.2 ஓவ, ) (துடுப்பாட்டம்: கலும் மக்லியொட் ஆ.இ 157 (146), றிச்சி பெரிங்டன் 67 (95) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 2/47)

போட்டியின் நாயகன்: கலும் மக்லியொட்

இதேவேளை, புலவாயவோவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியி 116 ஓட்டங்களால் நேபாளத்தை சிம்பாப்வே வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 380/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: சிகண்டர் ராசா 123 (66), பிரெண்டன் டெய்லர் 100 (91), சொலமன் மிரே 52 (41), செபாஸ் ஸுவாவோ 41 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: பசண்ட் றெக்மி 2/69, சொம்பல் கமி 2/82)

நேபாளம்: 264/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷரட் வெஸோகர் 52 (48), ஆரிப் ஷெய்க் 50 (59), பராஸ் கட்கா 40 (37), ஜியனேந்திர மல்லா 32 (59) ஓட்டங்கள்.  பந்துவீச்சு: சிகண்டர் ராசா 3/48, பிரயான் விட்டோரி 2/46)

போட்டியின் நாயகன்: சிகண்டர் ராசா

இந்நிலையில், ஹராரேயில் இடம்பெற்ற நெதர்லாந்துடனான போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 93 ஓட்டங்களால் அயர்லாந்து வென்றது. அயர்லாந்தின் இனிங்ஸின் முடிவுற்றதுடம் மழை பெய்தமை காரணமாக, நெதர்லாந்துக்கு 41 ஓவர்களில் 243 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நெதர்லாந்து

அயர்லாந்து: 268/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 68 (75), நைஜல் ஓ பிரயன் 49 (35), வில்லியம் போர்ட்பீல்ட் 47 (69) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் வான் டர் குட்டன் 3/59)

நெதர்லாந்து: 149/10 (32.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் வான் டர் குட்டன் 33 (25), ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 26 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் முர்ட்டாக் 3/28, பொய்ட் ராங்கின் 2/19, கெவின் ஓ பிரயன் 2/18, பரி மக்கார்த்தி 2/18)

போட்டியின் நாயகன்: அன்டி போல்பிரைன்

இதேவேளை, ஹராரேயில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 56 ஓட்டங்களால் பப்புவா நியூ கினியை ஐக்கிய அரபு அமீரகம் வென்றது.  ஐக்கிய அரபு அமீரகத்தின் இனிங்ஸ் முடிவடைந்த நிலையில் மழை பெய்தமையைத் தொடர்ந்து, 28 ஓவர்களில் 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு பப்புவா நியூ கினிக்கு வழங்க்கப்பட்டிருந்தது.

ஸ்கோர் விவரம்

நாணயச் சுழற்சி: பப்புவா நியூ கினி

ஐக்கிய அரபு அமீரகம்: 221/10 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஹன் முஸ்தபா 95 (136), அஷ்பக் அஹமட் 50 (56) ஓட்டங்கள். பந்துவீச்சு: நோர்மன் வனுனா 4/39, அலெய் நாவோ 2/42)

பப்புவா நியூ கினி: 113/10 (25.5 ஓவ. ) (பந்துவீச்சு: மொஹமட் நவீட் 5/28, இம்ரான் ஹைதர் 2/21)

போட்டியின் நாயகன்: மொஹமட் நவீட்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .