2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஆர்சனல் – யுனைட்டெட் போட்டி சமநிலை

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணிக்கும் ஆர்சனலுக்குமிடையயிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியில் யுனைட்டெட்டின் நட்சத்திர வீரர்களான போல் பொக்பா, றொமெலு லுக்காக்கு ஆகியோர் மாற்று வீரர்களாகவே காணப்பட்ட நிலையில், சக வீரர் லூகாஸ் டொரெய்ராவிடமிருந்து பந்தை போட்டியின் 26ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கிய ஆர்சனலின் ஸ்கொட்ரான் முஸ்டாபி தனதணிக்கு முன்னிலையை வழங்கினார். இக்கோலை யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா தடுத்திருக்கக் கூடிய வாய்ப்பு காணப்பட்டிருந்தபோதும் அவரின் தவறாலேயே இக்கோல் பெறப்பட்டிருந்ததுடன், அவருக்குப் பின்னாலிருந்த அன்டர் ஹெரேரா கோல் பெறப்படுவதை தடுத்திருக்கவில்லை.

எவ்வாறெனினும் ஆர்சனலின் முன்னிலை சிறிது நேரமே நீடித்தது. அடுத்த நான்காவது நிமிடத்தில் யுனைட்டெட்டின் மார்க்கஸ் றோஜோ செலுத்திய பிறீ கிக்கை, அவரின் சக வீரர் அன்டர் ஹெரேரா அன்டோனி மார்ஷியலிடம் வழங்க, அவர் அதைக் கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

தொடர்ந்த ஆட்டத்தில், மார்க்கஸ் றோஜோ தவறுதலாக ஆர்சனலின் மாற்று வீரர் ஹென்றிக் மிகித்தரயானிடம் வழங்கிய பந்தை, அவர் தனது சக மாற்று வீரரான அலெக்ஸான்ட்ரே லகஸ்ரேயிடம் கொடுக்க அவர் போட்டியில் 68ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்த அது மார்க்கஸ் றோஜோவின் கால்களில் பட்டுச் செல்ல ஆர்சனல் மீண்டும் முன்னிலை பெற்றது.

எனினும், அடுத்த நிமிடத்தில், ஆர்சனலின் சீட் கொலாசினக் பின்நோக்கி நகர்த்த முயன்ற பந்தை யுனைட்டெட்டின் ஜெஸி லிங்கார்ட் கோலாக்கியதோடு இறுதியில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, இலங்கை நேரப்படி இன்று  அதிகாலை இடம்பெற்ற ஏனைய பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

வொல்வ்ஸின் மைதானத்தில்,

வொல்வ்ஸ் 2 – 1 செல்சி

முதற்பாதி முடிவில் 0-1

றாவுல் ஜிமென்ஸ் 59   ருபென் லொவ்டஸ் சீக் 18

ஜோட்டா 63

பேர்ண்லியின் மைதானத்தில்,

லிவர்பூல் 3 – 1 பேர்ண்லி

முதற்பாதி முடிவில் 0-0

ஜேம்ஸ் மில்னர் 62  ஜக் கொர்க் 54

றொபேர்ட்டோ பெர்மினோ 69

ஸ்கொட்ரான் ஷகி 90+1

டொட்டென்ஹாமின் மைதானத்தில்,

டொட்டென்ஹாம் 3 – 1 செளதாம்டன்

முதற்பாதி முடிவில் 3-0

ஹரி கேன் 9     சார்லி ஒஸ்டின் 90 +3

லூகாஸ் மோரா 51

சண் ஹெயுங் மின் 55

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

  1. மன்செஸ்டர் சிற்றி 41 புள்ளிகள்
  2. லிவர்பூல் 39 புள்ளிகள்
  3. டொட்டென்ஹாம் 33 புள்ளிகள்
  4. செல்சி 31 புள்ளிகள்
  5. ஆர்சனல் 31 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X