2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆஷஸின் 5ஆவது டெஸ்டில் வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், சிட்னியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான ஐந்தாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து போராட்டத்தை வெளிப்படுத்திய வண்ணமுள்ளபோதும் இப்போட்டியில் வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா பயணிக்கிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 346 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஜோ றூட் 83, டேவிட் மலன் 62, அலிஸ்டயர் குக் 39, டொம் குரான் 39, ஸ்டூவர்ட் ப்ரோட் 31, மொயின் அலி 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற் கமின்ஸ் 4, ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 7 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், உஸ்மான் கவாஜா 171, ஷோர்ன் மார்ஷ் 156, மிற்செல் மார்ஷ் 101, அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 83, டேவிட் வோணர் 56, டிம் பெய்ன் ஆட்டமிழக்காமல் 38, பற் கமின்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொயின் அலி 2, ஜேம்ஸ் அன்டர்சன், டொம் குரான், மேஸன் கிரேன், ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 210 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. தற்போது களத்தில், ஜோ றூட் 42, ஜொனி பெயார்ஸ்டோ 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். பந்துவீச்சில், நேதன் லையன் 2, பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .