2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ஆஷஸை 4-0 எனக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 ஜனவரி 08 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரை 4-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

சிட்னியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான ஐந்தாவது போட்டியை இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் இன்று வென்றதைத் தொடர்ந்தே ஆஷஸை 4-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய ஐந்தாம் நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஜோ றூட் 58, ஜொனி பெயார்ஸ்டோ 38, டொம் குரான் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற் கமின்ஸ் 4, நேதன் லையன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக பற் கமின்ஸ் தெரிவானதோடு, இத்தொடரின் நாயகனாக, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 346/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 83, டேவிட் மலன் 62, டொம் குரான் 39, அலிஸ்டயர் குக் 39, ஸ்டூவர்ட் ப்ரோட் 31, மொயின் அலி 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/80, ஜொஷ் ஹேசில்வூட் 2/65, மிற்செல் ஸ்டார்க் 2/80)

அவுஸ்திரேலியா: 649/7 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 171, ஷோர்ன் மார்ஷ் 156, மிற்செல் மார்ஷ் 101, ஸ்டீவ் ஸ்மித் 83, டேவிட் வோணர் 56, டிம் பெய்ன் ஆ.இ 38, பற் கமின்ஸ் ஆ.இ 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 2/170, ஜேம்ஸ் அன்டர்சன் 1/56, டொம் குரான் 1/82)

இங்கிலாந்து: 180/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 58, ஜொனி பெயார்ஸ்டோ 38, டொம் குரான் ஆ.இ 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/39, நேதன் லையன் 3/54)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .