2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, செளதாம்டனில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

அந்தவகையில் கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர் இப்போட்டியுடன் கிரிக்கெட் மீளத் திரும்புகின்ற நிலையில், போட்டி முடிவுக்கப்பால் போட்டி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது உற்று நோக்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், கேமார் றோச், ஷனொன் கப்ரியல், அல்ஸாரி ஜோசப் என பலமான வேகப்பந்துவீச்சுவரிசையைக் கொண்டிருக்கின்ற நிலையில், கிரேய்க் பிறத்வெய்ட், ஷே ஹோப், ஷேன் டெளரிச் உள்ளிட்ட வீரர்கள் ஓட்டங்களைப் பெறுமிடத்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் மேற்கிந்தியத் தீவுகள் சாதிக்க முடியும்.

மறுபக்கமாக சொந்த மண்ணில் அசைக்க முடியாத வீரனாகக் காணப்படும் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சுக் குழாமை எவ்வாறு எதிர்கொள்வது என்பதிலேயே இத்தொடரின் முடிவு தங்கியிருக்கிறது.

இந்நிலையில், தனது இரண்டாவது பிள்ளையின் பிறப்பு காரணமாக முதலாவது டெஸ்டை இங்கிலாந்தின் வழமையான டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஜோ றூட் தவறவிடுகின்ற நிலையில், அவரைப் பிரதியிடுகின்ற பென் ஸ்டோக்ஸின் தலைமைத்துவத்தோடு, பணிச்சுமையையும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நோக்கப்படும். ஏனெனில் இங்கிலாந்தின் மத்தியவரிசையின் முள்ளந்தண்டாக பென் ஸ்டோக்ஸே காணப்படுவதோடு, பந்துவீச்சிலும் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியவராக உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .