2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் லிவர்பூல்

Editorial   / 2018 மே 03 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியின் 5-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவை வென்றிருந்த லிவர்பூல், இந்த அதிகரித்த முன்னிலை காரணமாக றோமாவின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் இரண்டு கோல் வித்தியாசத்தில் தோற்றபோதும் மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டது.

நேற்றைய போட்டியின் ஒன்பதாவது நிமிடத்திலேயே, றொபேர்ட்டோ பெர்மினோ கொடுத்த சாதுர்யமான பந்துப் பரிமாற்றத்தை சாடியோ மனே கோலாக்க லிவர்பூல் முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த ஆறாவது நிமிடத்தில், லிவர்பூலின் டெஜன் லொவ்ரேன் உதைந்த பந்து, ஜேம்ஸ் மில்னரின் பட்டு அவர்களின் கோல் கம்பத்துக்குள்ளேயே செல்ல கோலெண்ணிக்கை சமமானது. எவ்வாறெனினும் அடுத்த 10ஆவது நிமிடத்தில் ஜோர்ஜினியோ விஜ்னால்டும் தலையால் முட்டிப் பெற்ற கோலோடு லிவர்பூல் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் மீண்டு வந்த றோமா, போட்டியின் 52ஆவது நிமிடத்தில் எடின் டெக்கோ பெற்ற கோலோடு கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதோடு, போட்டியின் இறுதிக் கணங்களில் பெனால்டியொன்று உட்பட றட்ஜா நைங்கொலன் பெற்ற இரண்டு கோல்களால் இந்த இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றபோதும் 6-7 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .