2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிரான 3ஆவது ODI-இல் அவுஸ்திரேலியாவுக்கு சாதனை வெற்றி

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) 18 தடவைகள் தொடர்ச்சியாக வெற்றிபெற்று அவுஸ்திரேலிய பெண்கள் அணி சாதனை படைத்துள்ளது.

பிறிஸ்பேணில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 1997ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரையில் பெலிந்தா கிளார்க்கின் தலைமையின் கீழ் 17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தாம் தொடர்ச்சியாக வென்றதை தற்போது அவுஸ்திரேலியா முறியடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 195/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 103 (124), ஹர்ஷிதா மாதவி 24 (48), அமா காஞ்சனா 17 (49), ஒஷாடி ரணசிங்கே 17 (36), அஷினி குலசூரிய ஆ.இ 12 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜியா வரென்ஹாம் 2/18 [4], மேகன் ஸ்கட் 2/44 [10], நிக்கொலா காரி 1/28 [10], எலைஸ் பெரி 1/26 [6], டெலிஸ்ஸா கிம்மின்ஸ் 1/26 [6])

அவுஸ்திரேலியா: 196/1 (26.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலைஸா ஹீலி ஆ.இ 112 (76), றேச்சல் ஹெய்ன்ஸ் 63 (74), மெக் லன்னிங் ஆ.இ 20 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமரி அத்தப்பத்து 1/32 [3.5])

போட்டியின் நாயகி: அலைஸா ஹீலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X