2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையை முந்தியது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2018 மே 02 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில், இலங்கையைப் பின்தள்ளி எட்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட வருடாந்த தரவரிசையில், 2014-15 பருவகால புள்ளிகள் இல்லாமற் போனதுடன், 2015-16, 2016-17 பருவகாலத்தான் 50 சதவீதமான புள்ளிகளே கணக்கெடுப்பட்ட நிலையில் நான்கு புள்ளிகளை இழந்துள்ள இலங்கை எட்டாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளதுடன் ஒரு புள்ளியைப் பெற்ற ஆப்கானிஸ்தான் ஒன்பதாமிடத்திலிருந்து எட்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. வேறு மாற்றங்கள் எதுவும் தரவரிசையில் ஏற்படவில்லை.

தரவரிசை பின்வருமாறு, 1. பாகிஸ்தான், 2. அவுஸ்திரேலியா, 3. இந்தியா, 4. நியூசிலாந்து, 5. இங்கிலாந்து, 6. தென்னாபிரிக்கா, 7. மேற்கிந்தியத் தீவுகள், 8. ஆப்கானிஸ்தான், 9. இலங்கை, 10. பங்களாதேஷ்

இதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில், எட்டுப் புள்ளிகளைப் பெற்ற இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்காவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒரு புள்ளியை இழந்த இந்தியா, முதலாமிடத்திலிருந்து இரண்டாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளதுடன், நான்கு புள்ளிகளை இழந்த தென்னாபிரிக்கா இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது. வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை. தரவரிசை பின்வருமாறு

  1. இங்கிலாந்து, 2. இந்தியா, 3. தென்னாபிரிக்கா, 4. நியூசிலாந்து, 5. அவுஸ்திரேலியா, 6. பாகிஸ்தான், 7. பங்களாதேஷ், 8. இலங்கை, 9. மேற்கிந்தியத் தீவுகள், 10. ஆப்கானிஸ்தான்.

டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்திலுள்ள இந்தியா, தனக்கும் இரண்டாமிடத்திலுள்ள தென்னாபிரிக்காவுக்குமிடையிலான புள்ளிகள் இடைவெளியை அதிகரித்துக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் நான்கு புள்ளிகள் இடைவெளியையே கொண்டிருந்த இந்தியா, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வருடாந்த தரவரிசை இற்றைப்படுத்தலில் நான்கு புள்ளிகளை இந்தியா பெற்றதோடு, தென்னாபிரிக்கா ஐந்து புள்ளிகளை இழந்த நிலையிலேயே இந்தியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்குமான புள்ளி இடைவெளி 13 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தரவரிசையில் முதற்தடவையாக எட்டாமிடத்துக்கு, மேற்கிந்தியத்தீவுகளை தாண்டி பங்களாதேஷ் முன்னேறியுள்ளது.

தரவரிசை பின்வருமாறு, 1. இந்தியா, 2. தென்னாபிரிக்கா, 3. அவுஸ்திரேலியா, 4. நியூசிலாந்து, 5. இங்கிலாந்து, 6. இலங்கை, 7. பாகிஸ்தான், 8. பங்களாதேஷ், 9. மேற்கிந்தியத் தீவுகள், 10. சிம்பாப்வே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X