2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகக் கிண்ணத்தில் குரோஷியா, சுவிற்ஸர்லாந்து

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன. நேற்று  இடம்பெற்ற தத்தமது இரண்டாவது சுற்று தகுதிப் போட்டிகளில் முடிவில், கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுக் கொண்டதன் மூலமே குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றன.

தமது முதலாவது சுற்று தகுதிப் போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் கிரேக்கத்தை வென்ற குரோஷியா, நேற்று  இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் கோலெதனையும் பெறாமலும் கிரேக்கம் கோலைப் பெற அனுமதிக்காதும் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்து, மொத்தமாக 4-1 என்ற கோல் ரீதியில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய பெனால்டியால் கிடைத்த கோல் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில், முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் வென்றிருந்த வட அயர்லாந்தை வென்றிருந்த சுவிற்ஸர்லாந்து, நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில், கோலெதனையும் பெறாமலும் வட அயர்லாந்து கோலைப் பெற அனுமதிக்காதும் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்து, மொத்தமாக 1-0 என்ற கோல் ரீதியில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில், உலகக் கிண்ணத்துக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுள்ள எகிப்து, கானாவுடன் நேற்று இடம்பெற்ற தமது இறுதி தகுதிகாண் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது. கடந்த மூன்று கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் விளையாடிய கானா, இம்முறை உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியுள்ளது. மறுபக்கம், 1990ஆம் ஆண்டுக்குப் பிந்தையதான முதலாவது கால்பந்தாட்ட உலகக் கிண்ணமாக எகிப்துக்கு இது அமையவுள்ளது.

இதேவேளை, உலக கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்கெனவே இழந்த உகண்டா, கொங்கோ அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற அவற்றின் இறுதி தகுதிகாண் போட்டியில் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .