2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.பி.எல் திருவிழா நாளை ஆரம்பமாகின்றது

Editorial   / 2018 ஏப்ரல் 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாண்டுத் தடைக்கு பின்னர் இந்தியன் பிறீமியர் லீக்குக்கு (ஐ.பி.எல்) திரும்புகின்ற சென்னை சுப்பர் கிங்ஸுக்கும் ஐ.பி.எல்லின் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணிக்குமிடையே மும்பையில் நாளை இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியுடன் ஐ.பி.எல்லின் 11ஆவது பருவகாலம் ஆரம்பிக்கின்றது.

இம்முறை ஐ.பி.எல்க்கு முன்னர் அனைத்து வீரர்களுக்கும் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் பெரும்பாலான அணிகள் குறிப்பிட்டளவான வீரர்களைக் கொண்டே அணிகளைக் கட்டமைத்துள்ள நிலையில், கொல்கத்தா நைட்றைடர்ஸ், டெல்லி டெயாடெவில்ஸ், கிங்ஸ் லெவிண் பஞ்சாப், ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் தமது குறிப்பிட்டளவான அணிகளை புதிதாகக் கட்டமைத்துள்ளன.

அந்தவகையில், இதுவரையில் நடைபெற்ற 10 ஐ.பி.எல்களில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சம்பியனானதுடன், சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் றைடர்ஸ் ஆகியவை தலா இரண்டு தடவைகள் சம்பியனானதுடன், ராஜஸ்தான் றோயல்ஸ், டெக்கான் சாஜர்ஸ், சண்றைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகள் ஒவ்வொரு தடவை சம்பியனாகியுள்ளன.

ஆக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலியின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டெயாடெவில்ஸ், கிங்ஸ் லெவிண் பஞ்சாப் ஆகிய அணிகள் ஒரு முறையும் சம்பியனாகவில்லை. அந்தவகையில், வழமையாக துடுப்பாட்டத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு இம்முறை சீரான அணியொன்றைக் கொண்டிருக்கின்ற நிலையில், மும்பை இந்தியன்ஸுடன் சம்பியனாகுவதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணியாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, இரண்டாண்டுத் தடைக்குப் பின்னர் சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் இம்முறை ஐ.பி.எல்லில் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, ஐ.பி.எல்லில் வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை தீர்ப்பு மறுபரீசிலனைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு போட்டியில், ஒவ்வோர் அணியும் ஒவ்வோர் இனிங்ஸிலும் தலா ஒவ்வொரு முறை தீர்ப்பு மறுபரிசீலனையை பயன்படுத்த முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X