2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒய்வு பெற்றார் பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனி சர்வதேச கால்பந்தாட்ட அணியின் மத்தியகளவீரரான பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர் ஓய்வு பெற்றார்.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சினும் முன்னாள் மத்தியகளவீரரான பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர், ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் சொக்கர் தொடரின் பருவகாலத்தின் முடிவின் இரண்டு நாட்களின் பின்னரே தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தை ஜேர்மனியுடன் 2014ஆம் ஆண்டு வென்றிருந்த இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் மத்தியகளவீரருமான பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர், பயேர்ண் மியூனிச்சுடன் எட்டு புண்டெலிஸ்கா பட்டங்களையும் வென்றிருந்தார்.

ஜேர்மனிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 35 வயதான பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர், 2016ஆம் ஆண்டு வரையில் 121 போட்டிகளில் 24 கோல்களைப் பெற்றிருந்தார்.

இதுதவிர, பயேர்ண் மியூனிச்சுக்காக 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியிருந்த பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர், அவ்வணியுடன் சம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்தார். 2015ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைட்டெட்டில் இணைந்தபோதும், இரண்டு ஆண்டுகளில் 13 இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளிலேயே ஆரம்பித்த பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர், 2017ஆம் ஆண்டு மார்ச்சில் சிக்காக்கோ ஃபயருடன் இணைந்திருந்தார்.

இந்நிலையில், ஜேர்மனி பயிற்சியாளர் குழாமுடன் நுழைவதற்கு பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகர் வரவேற்கப்படுகின்றார் என ஜேர்மனியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயேர்ண் மியூனிச்சில் பஸ்டியான் ஸ்வான்ஸ்டைகருக்கு கதவுகள் எப்போதும் திறந்துள்ளன என பயேர்ண் மியூனிச்சின் பிரதம நிறைவேற்றதிகாரி கார்ல்-ஹெய்ன்ஸ் ருமினிகே கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .