2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒலிம்பிக் மரதனோட்டப் போட்டியில் தங்கம் வென்றவருக்குத் தடை

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் றியோவில் கடந்தாண்டு இடம்பெற்ற ஒலிம்பிக்கில், மரதனோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற, கென்யாவின் ஜெமிமா சும்கொங்குக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருப்பையை தவிர்ந்து வேறு இடங்களில் கருக்கட்டியமைக்காகவே எரித்ரோபொய்ட்டினை பயன்படுத்தியதான சும்கொங்கின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே சும்கொங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட எரித்ரோபொய்ட்டின் வைத்தியசாலையில் வழங்கப்பட்டதாக, கென்ய சட்ட நீதிமன்றமொன்றில் சும்கொங் தெரிவித்தபோதும் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியான நபரொருவரால் வழங்கப்பட்டது எனக் கருதப்பட்டதாலும் அவரின் கோரிக்கை நம்பத் தகுந்ததெனவும் கருதப்பட்டிருந்தது.

இதேவேளை, தனது கணவருக்கு கர்ப்பம் குறித்துத் தெரியாதெனவும்  சும்கொங் கூறியிருந்தார்.

முதலில், இவ்வாண்டு ஏப்ரலில் சும்கொங் இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் உற்பத்தியை அதிகரிகரிக்கவும் உடலில் மேலும் ஒட்சிசன் பரம்பலடைவதை ஊக்குவிக்கவுமே எரித்ரோபொய்ட்டின் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.

சும்கொங் தொடர்பான விசாரணை, கென்யாவின் ஊக்கமருந்துக்கெதிரான நிறுவகத்தால், கென்யாவின் விளையாட்டு பிரச்சினைகள் தீர்ப்பாயத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், எதிர்பாரதவிதமான குற்றத்தையும் உள்நோக்கமற்ற தவறையும் சும்கொங் புரிந்ததாக தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

எவ்வாறெனினும், 2012ஆம் ஆண்டும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியிருந்த சும்கொங், விசாரணைகளின்போது ஒத்துழைக்கவில்லையெனவும் எதுவிதத் தகவலையும் வழங்கவில்லையென ஊக்கமருந்துக்கெதிரான நிறுவகத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஜப்டர் ருகுட் தெரிவித்திருந்தார்.

ஒலிம்பிக் மரதோனோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது கென்யப் பெண்ணான சும்கொங், இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதியே உத்தியோகபூர்வமாக தடைசெய்யப்பட்டபோதும் குறித்த திகதியானது, இவ்வாண்டு ஏப்ரல் மூன்றாம் திகதிக்கு பின்னகர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சும்கொங் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .