2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒஸ்திரியாவிடம் தோற்றது ஜேர்மனி

Editorial   / 2018 ஜூன் 03 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் பொருட்டு அணிகள் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கின்ற நிலையில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் ஒஸ்திரியா, இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

நடப்புச் சம்பியன்களான ஜேர்மனி, 1-2 என்ற கோல் கணக்கில் ஒஸ்திரியாவிடம் தோல்வியடைந்திருந்தது. ஒஸ்திரியா சார்பாக, மார்டின் ஹின்டெரெக்கர், அலெக்ஸ்ஸான்ட்ரோ ஷொப்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஜேர்மனி சார்பாகப் பெறப்பட்ட கோலை மெசூட் ஏஸில் பெற்றிருந்தார்.

முறிவடைந்த கால் காரணமாக கடந்த செப்டெம்பரிலிருந்து போட்டிகளில் பங்கேற்றிருக்காத ஜேர்மனியின் கோல் காப்பாளர் மனுவல் நோயர் இப்போட்டியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இப்போட்டியில், தோமஸ் முல்லர், மற் ஹம்மல்ஸ், டொனி க்றூஸ் உள்ளிட்ட ஜேர்மனியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இங்கிலாந்து, 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றிருந்தது. இங்கிலாந்து சார்பாக, கரி காஹில், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, நைஜீரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸ் இவோபி பெற்றிருந்தார்.

இந்நிலையில், பெல்ஜியம், போர்த்துக்கல் அணிகளுக்கிடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. போர்த்துக்கல் அணியின் நட்சத்திர முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .