2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஓய்வு பெறவுள்ள சயீட் அஜ்மல்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான தேசிய இருபதுக்கு – 20 கிண்ணத் தொடர் இம்மாத இறுதியில் முடிவடையும்போது, பாகிஸ்தானின் சிரேஷ்ட வீரரான சயீட் அஜ்மல் ஓய்வுபெறவுள்ளார்.

குறித்த தொடரில் பைஸலாபாத் அணிக்குத் தலைமை தாங்கும் 40 வயதான சயீட் அஜ்மல், லாகூர் புளூஸ் அணிக்கெதிரான போட்டியில், தனது நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து அஹமட் ஷெஷாட், பாபர் அஸாம் ஆகியோரின் விக்கெட்டுகள் உட்பட மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதோடு, மொஹமட் ஹபீஸை ரண் அவுட் செய்திருந்த நிலையிலேயே, சயீட் அஜ்மலின் ஓய்வு குறித்த தகவல் வெளியாகியிருந்தது. இத்தொடரின் முடிவிலேயே தனது உத்தியோகபூர்வமான ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டு ஆசியக் கின்ணத் தொடரில், தனது 32ஆவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகத்தை சயீட் அஜ்மல் மேற்கொண்டபோதும் பாகிஸ்தானின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

 பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர்களிலொருவரான மிஸ்பா உல் ஹக்கின் கீழேயே, 2011ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் அனைத்து வகையான போட்டிகளிலும் முக்கியமானவராக சயீட் அஜ்மல் காணப்பட்டிருந்தார். மொத்தமாக 35 டெஸ்ட்களில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சயீட் அஜ்மல், மிஸ்பா உல் ஹக்கின் தலைமையின் கீழ் 26 டெஸ்ட்களில் 141 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, 113 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய சயீட் அஜ்மல் 184 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 64 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

எவ்வாறெனினும் முறையற்ற பந்துவீச்சுப் பாணியைக் கொண்டிருப்பதாக இரண்டு தடவைகள் சயீட் அஜ்மலுக்கெதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் அதிலிருந்து மீண்டு உடனே மீண்டும் விளையாடியபோதும் 2014ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் அவரின் விளையாடும் காலம் ஏறத்தாழ முடிவடைந்தது. அதன்பின்னர் சயீட் அஜ்மல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X