2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காலிறுதியில் றியல் மட்ரிட், லிவர்பூல்

Editorial   / 2018 மார்ச் 07 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியனான றியல் மட்ரிட் மற்றும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் ஆகியன தகுதிபெற்றுள்ளன.

றியல் மட்ரிட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை வென்றும் லிவர்பூல், போர்த்துக்கல் கழகமான எப்.சி போர்ட்டோவை வென்றுமே சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த றியல் மட்ரிட், அப்போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்றிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் லூகாஸ் வஸ்கூஸிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 51ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோலாக்கி றியல் மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்து, முதலாவது பாதியில் கஸேமீரோவிடம் விதிமுறைகளி மீறி நடந்ததுக்காக மஞ்சள் அட்டை காட்டப் பெற்றிருந்த பரிஸ் ஸா ஜெர்மைனின் மார்கோ வெராட்டி, இரண்டாவது பாதியில் மத்தியஸ்தரால் எச்சரிக்கப்படும்போது ஓடியமை காரணமாக இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பெற்று சிவப்பு அட்டை பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, 10 பேருடன் பரிஸ் ஸா ஜெர்மைன் விளையாடிக் கொண்டிருக்கையில், கஸேமீரோவின் காலில் பட்டு எடின்சன் கவானியில் பட்டு கோலாக கோலெண்ணிக்கை சமமானது. எனினும் போட்டியின் 80ஆவது நிமிடத்தில் கஸேமீரோ பெற்ற கோலின் காரணமாக இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற றியல் மட்ரிட், 5-2 என்ற மொத்த கோலெண்ணிக்கை அடிப்படையில் காலிறுதிக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, எப்.சி போர்ட்டோவின் மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தையை சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த லிவர்பூல், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற காலிறுதில்க்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்து, 5-0 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .