2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமநிலையில் முடிவடைந்த மட்ரிட்களின் மோதல்

Editorial   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணிக்கும் அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியின் 53ஆவது நிமிடத்தில், தமதணியின் கரித் பேல் கொடுத்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்க றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த நான்கு நிமிடங்களில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் விட்டோலோவின் உதையை றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் தடுத்தபோது வந்த பந்தை அத்லெட்டிகோ மட்ரிட்டின் அன்டோனி கிறீஸ்மன் கோலாக்கியதோடு 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் தமது காலிறுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றில், கடந்த முறை சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி வரை வந்த இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸை தமது மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை றியல் மட்ரிட் எதிர்கொள்ளவுள்ள நிலையில், குறித்த போட்டி முடிவடைய 26 நிமிடங்களிருக்கையில், கரிம் பென்ஸீமாவால் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இப்போட்டி முடிவில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா முதலிடத்திலிருப்பதுடன், 68 புள்ளிகளைப் பெற்றுள்ள அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்திலிருப்பதுடன் 65 புள்ளிகளைப் பெற்றுள்ள வலென்சியா மூன்றாமிடத்திலுள்ளது. 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .