2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனாக முடிசூடியது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் சம்பியனாக மன்செஸ்டர் சிற்றி நேற்று முடிசூடிக் கொண்டது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுடனான போட்டியில் வென்றிருந்த மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் தமக்கடுத்ததாக இரண்டாமிடத்திலுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணியுடன் நேற்று  இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்தமையடுத்தே சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 87 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் காணப்படும் மன்செஸ்டர் சிற்றியும் 71 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் காணப்படும் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் தலா 33 போட்டிகளில் இதுவரையில் விளையாடியுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் மேலும் ஐந்து போட்டிகள் காணப்படுகின்றன.

அந்தவகையில், அடுத்த ஐந்து போட்டிகளிலும் மன்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்து, தமது ஐந்து போட்டிகளிலும் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றாலும் 86 புள்ளிகளையே அடைய முடியுமென்ற நிலையிலேயே இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் சம்பியன்களாக மன்செஸ்டர் சிற்றி முடிசூடிக் கொண்டது.

இந்நிலையில், நடப்பு பருவகாலத்துடன் சேர்த்து, கடந்த ஏழு பருவகாலங்களில் மூன்று தடவைகள் மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் சம்பியன்களாக முடிசூடியிருக்கிறது.

நடப்பு இங்கிலாந்து பிறீமியர் பருவகாலத்தில் தாம் இதுவரையில் விளையாடியிருக்கிற 33 போட்டிகளில், 93 கோல்களைப் பெற்றிருக்கின்ற மன்செஸ்டர் சிற்றி, இரண்டு போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்திருக்கின்றது.

இதேவேளை, நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தில் 18 வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்று, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் அதிக போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற சாதனையைப் படைத்திருந்த மன்செஸ்டர் சிற்றி, நடப்பு பருவகாலத்தில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கிலிருந்த ஏனைய அணிகளை குறைந்தது ஒரு தடவையாவது வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X