2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீரி ஏ சம்பியனாகியது ஜுவென்டஸ்

Editorial   / 2018 மே 14 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக ஜுவென்டஸ் சம்பியனாகியது.

றோமா அணியின் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டமையைத் தொடர்ந்தே நடப்பு சீரி ஏ சம்பியன்களாக தம்மை ஜுவென்டஸ் உறுதிப்படுத்திக் கொண்டது.

இப்போட்டியின் ஆரம்பத்தில், றோமாவின் எடின் டெக்கோவும் றட்ஜா நைன்கொலனும் தமது உதைகளை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தனர். பின்னர் றோமாவின் அலெக்ஸான்டர் கொலாரோவின் உதையும் கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார். மறுபக்கத்தில் ஜுவென்டஸின் போலோ டிபாலா செலுத்திய உதையும் கோல் கம்பத்துக்கு வெளியே செல்ல முதற்பாதியில் கோலெதுவும் பெறப்படாமல் முடிவடைந்தது.

இரண்டாவது பாதி ஆரம்பித்து மூன்று நிமிடங்களில், போலோ டிபாலா கோலொன்றைப் பெற்றதாகக் கருதப்பட்டபோதும் அது ஓவ் சைட்டில் இருந்து பெறப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் போட்ட்டியின் 63ஆவது நிமிடத்தில் ஜுவென்டஸின் அலெக்ஸ் ஸான்ட்ரோவை இழுத்ததுக்காக மஞ்சள் அட்டை காட்டப் பெற்ற றட்ஜா நைன்கொலன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போலோ டிபாலாவை விதிமுறைகளை மீறி கையாண்டதால் மீண்டும் மஞ்சள் அட்டை காட்டப் பெற்று, சிவப்பு அட்டை பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட்டிருந்தார். எனினும் 10 பேருடன் விளையாடிய றோமா அணிக்கெதிராக ஜுவென்டஸ் கோலெதையும் பெறாத நிலையில் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அந்தவகையில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையில் ஜுவென்டஸ் 92 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், இரண்டாமிடத்திலுள்ள நாப்போலி 88 புள்ளிகளுடன் காணப்படுகின்ற நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்றாலும் 91 புள்ளிகளையே அடையலாம் என்ற நிலையில் சீரி ஏ-இன் நடப்பு சம்பியன்களாக தம்மை ஜுவென்டஸ் உறுதிப்படுத்திக் கொண்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .