2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுப்பர் 6-இல் ஆப்கானிஸ்தான்

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் தகுதிபெற்றுள்ளது.

புலவாயவோவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஹொங் கொங்கொங்குடனான குழு பி போட்டியில் நேபாளம் வென்றமையைத் தொடர்ந்தே, குழு பியில் ஒரு போட்டியில் மாத்திரமே வென்றிருந்தபோதும் குறித்த குழுவில் ஒரு போட்டியில் மாத்திரம் வென்றிருந்த நேபாளம், ஹொங் கொங்கை விட சிறப்பான ஓட்ட சராசரியைக் கொண்டிருந்ததன் காரணமாக சுப்பர் 6-சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் தகுதிபெற்றது.

இதேவேளை, குறித்த பி குழுவில், ஆப்கானிஸ்தான் தவிர, புலவாயவோவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமக்கிடையேயான இறுதி குழுநிலைப் போட்டிகளை சிம்பாப்வேயும் ஸ்கொட்லாந்தும் சமநிலையில் முடித்துக் கொண்டிருந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா மூன்று போட்டிகளை குழுநிலையில் வென்றிருந்த நிலையில் ஆப்கானிஸ்தானோடு சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

இந்நிலையில், குழு ஏயில் தமது குழுநிலைப் போட்டிகளில் முறையே நான்கு, மூன்று, இரண்டு போட்டிகளை வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .