2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செரீனாவை வென்றார் வீனஸ்

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்றுவரும் பி.என்.பி பரிபஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், தனது தங்கையான செரீனா வில்லியம்ஸை வென்றார்.

வீனஸ் வில்லியம்ஸ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸை வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் முதல் நிலை வீரரான ரொஜர் பெடரர், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கரோலின் வொஸ்னியாக்கி ஆகியோரும் தமது மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் நான்காவது சுற்றுப் போட்டிக்களுக்கு தகுதிபெற்றனர்.

சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சேர்பியாவின் பிலிப் கிறைஜோவிச்சை வென்றார்.

டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் பெலாரஸின் அலியக்ஸான்ரா ஸஸ்னோவிச்சை வென்றார்.

இந்நிலையில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டொலினா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெய்னின் கார்லா சுவாரஸ் நவரோவாவிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கர்சியா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவாவை வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எலெனா வெஸ்னியானை வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 7-6 (7-1), 7-6 (7-3) என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் நிக்கொலஸ் கிக்கரை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .