2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘டென்னிஸைப் பற்றி கதைக்க விரும்பவில்லை’

Editorial   / 2018 ஜூன் 06 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், இத்தாலியின் மார்கோ செக்சினாட்டோவிடம் காலிறுதிப் போட்டியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறிய 12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் டென்னிஸைப் பற்றி தற்போது கதைக்க விரும்பவில்லையெனக் கூறியுள்ளார்.

உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், 3-6, 6-7 (4-7), 6-1, 6-7 (11-13) செட் கணக்கில் மார்கோ செக்சினாட்டோவிடம் நேற்று தோல்வியுற்றிருந்தார்.

இந்நிலையில், புற்தரையில் விளையாடுவேனோ எனத் தெரியாது என்றும் நொவக் ஜோக்கோவிச் கூறியுள்ள நிலையில், அடுத்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள விம்பிள்டன் தொடரில் நொவக் ஜோக்கோவிச் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், தனது காலிறுதிப் போட்டியில் நேற்று  பின் தொடைத் தசைநார் காயத்தால் அவதிப்பட்டிருந்த நிலையில், 4-6, 2-6, 1-6 என்ற நேர் செட்களில், உலகின் எட்டாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்மிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற பெண்களுக்கான காலிறுதிப் போட்டிகளில், உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸ், 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் டரியா கஸட்கினாவை வென்றும் மற்றொரு ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான மடிஸன் கீஸ், 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் கஸக்ஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவை வென்றும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .