2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

டொட்டென்ஹாம், ஆர்சனல் வென்றன

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், ஆர்சனல் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

ஏ.எப்.சி போர்ண்மெத் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, சண் ஹெயுங் மின் இரண்டு கோல்களையும் டெலே அல்லி, சேர்ஜி ஒறியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

குறித்த போட்டியில், ஏ.எப்.சி போர்ண்மெத்தின் கோல் காப்பாளர் அஸ்மிர் பெகோவிக்குடன் மோதுண்ட டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸினதும் இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான ஹரி கேன், கணுக்காலில் காயம் ஏற்பட்டு போட்டியின் 30 நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற வட்போர்ட் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, ஸ்கொட்ரான் முஸ்டாபி, பியரி எம்ரிக் அபுமெயாங், ஹென்றிக் மிகித்தரயான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இப்போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், மன்செஸ்டர் சிற்றி 78 புள்ளிகளுடன் முதலிடத்திலும் மன்செஸ்டர் யுனைட்டெட் 65 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் காணப்படுகின்ற நிலையில், 61 புள்ளிகளுடன் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.

லிவர்பூல், 60 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி 56 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் ஆர்சனல் 48 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும் காணப்படுகின்றன. இதில், மன்செஸ்டர் சிற்றி 29 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், ஏனைய அணிகளனைத்தும் 29 போட்டிகளில் விளையாடியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X