2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் முஜீப்

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே எட்டாமிடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை முஜீப் உர் ரஹ்மான் அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. முஜீப் உர் ரஹ்மான், 3. மிற்செல் சான்ட்னெர், 4. இமாட் வசீம், 5. அடம் ஸாம்பா, 6. அன்டிலி பெக்லுவாயோ, 7. அடில் ரஷீட், 8. ஷடாப் கான், 9. அஸ்தன் அகர், 10. கிறிஸ் ஜோர்டான்.

இதேவேளை மேற்குறிப்பிட்ட தொடரில் 106 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் எவின் லூயிஸ், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில், 14ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. ஆரோன் பின்ஞ், 3. டேவிட் மலன், 4. கொலின் மன்றோ, 5. கிளென் மக்ஸ்வெல், 6. ஹஸரத்துல்லா ஸஸாய், 7. எவின் லூயிஸ், 8. ரோஹித் ஷர்மா, 9. லோகேஷ் ராகுல், 10. ஒய்ன் மோர்கன்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. கிளென் மக்ஸ்வெல், 3. ஷோன் வில்லியம்ஸ், 4. றிச்சி பெரிங்டன், 5. றொஹான் முஸ்தபா.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X