2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாய்லாந்தின் குகைச் சிறுவர்கள் ஆர்ஜென்டீனாவில் விளையாடினர்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்துக் குகையொன்றில் வெள்ளத்துக்குள் ஒன்பது நாட்களாக சிக்கியிருந்து இவ்வாண்டு ஜூலையில் மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்தாட்ட பயிற்சியாளரும் 1978ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டி இடம்பெற்ற மைதானத்தில் போட்டியொன்றில் நேற்று முன்தினம் விளையாடியுள்ளனர்.

றிவர் பிளேட் அணியின் மைதானமாகிய குறித்த மைதானத்தில் றிவர் பிளேட் அணியின் 13 வயதுக்குட்பட்டோருக்கான அணியை எதிர்கொண்ட “வைல்ட் போர்ஸ்” என அழைக்கப்படும் தாய்லாந்துச் சிறுவர்களது அணி 3-3 என்ற கோல் கணக்கில் போட்டியைச் சமப்படுத்தியிருந்தது.

ஆர்ஜென்டீனாவின் உள்ளூர் போட்டிகளில் சாதனை ரீதியிலான சம்பியன்களான றிவர் பிளேட்டின் இலட்சினைகள் பொறித்த ஊதா நிற சீருடையுடன் தாய்லாந்துச் சிறுவர்கள் களமிறங்கியபோது அவர்களுக்கு 13 வயதுக்குட்ப்பட்ட றிவர் பிளேட் அணியால் பலத்த வரவேற்பளிக்கப்பட்டிருந்தனது.

11 தொடக்கம் 16 வயதான சிறுவர்களும் அவர்களது 25 வயதனா பயிற்சியாளரும் ஷியாங் றாயின் தாம் லுவாங் குகைக்கு இவ்வாண்டு ஜூன் 23ஆம் திகதி சென்றபோது சிக்கி, ஜுலை 10ஆம் திகதி முடிவுக்கு வந்த மீட்புப் பணியில் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்துக்குப் பிறகு பல இடங்களுக்கும் இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ஜென்டீனத் தலைநகர் புருனே அயர்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இளைஞர் ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்விலும் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .