2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திட்டமிடல் அவசியம் என்கிறார் மோர்கன்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துகளை எதிர்கொள்ள, திட்டமிடல் அவசியமென, இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில், இங்கிலாந்து தோல்வியடைந்த நிலையில், அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தப் போட்டியில், 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, போட்டியின் நாயகனாக, குல்தீப் யாதவ் தெரிவானார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மோர்கன், “பெங்களூருவிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை. எனினும் இந்த போட்டிக்கும், அதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. குல்தீப் நான்கு பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் எங்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டார், அதாவது, அவர் மிகச்சிறப்பாக பந்து வீசினார்” எனக் குறிப்பிட்டார்.

“குல்தீபின் பந்துகளை, இதனைவிட மிகச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். 30-40 ஓட்டங்களை நாம் குறைவாக எடுத்தோம். அடுத்த போட்டியில், எங்கள் திட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்ஃ அத்திட்டங்கள் சரியானவையாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒரு சுழற்பந்து வீச்சாளரை, எடுத்த எடுப்பில் இறங்கியவுடன் தடுத்தாடுவது கடினம். ஒரு பந்துவீச்சாளர், இருபுறமும் பந்தைச் சுழற்றுகிறார். அதனை எதிர்கொள்வது கடினம். ஆகவே, குல்தீப்புக்கு எதிரான திட்டமிடல் அவசியம்” எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .