2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தோல்வியின் எதிரொலி: ஓய்வு பெறுகிறார் இனியஸ்டா

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2010ஆம் ஆண்டில், கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, ஸ்பெயின் அணி கைப்பற்றுவதற்குக் காரணமாக அமைந்த, அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அன்டர்ஸ் இனியஸ்டா, சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி 16 அணிகளுக்கு இடையிலான "நொக் அவுட்" சுற்று ஆட்டத்தில், ஸபெய்ன் மற்றும் ரஷ்ய அணிகளுக்கிடையேயான போட்டியில், இரண்டு அணிகளுமே மேலதிக நேரத்திலும் கோல்கள் எதனையும் பெறவில்லை.

இந்நிலையில், பெனால்டி முறையில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

இதன் மூலம், கிண்ணத்தை வெல்லுமென எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான ஸ்பெயின், தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தத் தோல்வியின் எதிரொலியாக, இனியஸ்டா சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் அணியின் பொன்னான காலகட்டங்களில், அதி சிறந்த வீரராக அறியப்பட்ட இனியஸ்டா, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் போது, வெற்றிக்கோலைப் போட்டு கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

தனது ஓய்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இனியஸ்டா, "இதுதான் என்னுடைய கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது. தனிப்பட்ட மட்டத்தில், எனது கால்பந்தாட்ட வாழ்வின் கடைசி கட்டம் அற்புதமாகவே இருந்தது. சில நேரங்களில், நமது கடைசி கட்டம் என்பது, நாம் கனவு காண்பது போல் அமையாது. இறுதிக் கட்டத்தில், பெனால்டி ஷூட்டில் தோல்வியடைந்தது கொடூரமானது. இது, எனது வாழ்க்கையின் சோகமான நாள்” எனக் குறிப்பிட்டார்.

34 வயதான அன்டஸ் இனியஸ்டா, ஸ்பெயின் அணிக்காக 131 ஆட்டங்களில் பங்கேற்று, 13 கோல்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .