2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தோல்வியுடன் புண்டெலிஸ்கா பட்டம் பெற்றது பெயார்ண்

Editorial   / 2018 மே 13 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வி.எவ்.பி ஸ்டட்கார்ட் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தபோதும் ஏற்கெனவே தம்மை புண்டெலிஸ்கா தொடரின் சம்பியன்களாக உறுதிப்படுத்திக்கொண்டிருந்த பெயார்ண் மியூனிச் புண்டெலிஸ்கா பட்டத்தைப் பெற்றுக் கொண்டது.

இப்போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே டானியல் ஜின்செக் பெற்ற கோல் மூலமாக வி.எவ்.பி ஸ்டட்கார்ட் அணி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் றொபேர்ட் லெவன்டோஸ்கியிடமிருந்து பந்தைப் பெற்ற கொரென்டின் டொலிஸோ கோலொன்றைப் பெற கோலெண்ணிக்கையை பெயார்ண் மியூனிச் சமன் செய்தது.

எவ்வாறெனினும் போட்டியின் 42ஆவது நிமிடத்தில் அனஸ்டஸியோஸ் டொனிஸ் பெற்ற கோலின் மூலம் மீண்டும் முன்னிலை பெற்ற வி.எவ்.பி ஸ்டட்கார்ட் அணி, போட்டியின் 52ஆவது நிமிடத்தில் சட்ரக் அகோலோ பெற்ற கோலின் மூலம் முன்னிலையை இரட்டிப்பாக்கியதோடு, அடுத்த மூன்றாவது நிமிடத்தில் டானியல் ஜின்செக் பெற்ற இரண்டாவது கோலோடு இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், புண்டெலிஸ்கா தொடரில், இரண்டாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தின் பின்னர் தமது மைதானத்தில் முதலாவது தோல்வியை குறித்த போட்டியிலேயே பெயார்ண் மியூனிச் அடைந்திருந்தது.

இம்முறை புண்டெலிஸ்கா தொடரில், 29 கோல்களைப் பெற்று றொபேர்ட் லெவன்டோஸ்கி அதிக கோல்கள் பெற்றவராக தனது பெயரைப் பதிவுசெய்துகொண்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .