2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நெய்மர் அபாரம்: காலிறுதியில் பிரேசில்; வெளியேறியது ஜப்பான்

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில்இ இறுதி 16 அணிகள் பங்கேற்கும் "நொக் அவுட்" சுற்றில், மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி, காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்இ இடைவேளை வரை இரு அணிகளும் கோல் எதனையும் போடாத நிலையில்,  இடைவேளையின் பின்னரான 51ஆவது நிமிடத்தில்,  வில்லியன் நெய்மர், அருமையான கோல் ஒன்றை அடித்தார். பின்னர் போட்டியின் இறுதிக் கட்டத்தின் 88ஆவது நிமிடத்தில், ரொபர்டோ ஃபர்மினோ இன்னொரு கோலை அடித்து, வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் ஆரம்பத்தில், பெரும்பாலான நேரம் பந்து மெக்சிகோ வசமே இருந்தது. ஹிர்விங் லொசானோ அடித்த கோல் நோக்கிய "ஷொட்"ஐ பிரேசிலின் மிராண்டா மிக அற்புமாகத் தடுத்தார். நான்கு தடவைகளுக்கு மேல் கோல் நோக்கி அடிக்கப்பட்ட பந்துகளை, பிரேசில் வீரர்கள் மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினர்.

எனினும், 26ஆவது நிமிடத்தில், மெக்சிகோ பெனால்டி பகுதிக்குள் பந்தை நெய்மர் பின்புறமாக அனுப்பினார்இ வில்லியன் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு, மெக்சிகோ தடுப்பைக் கடந்து, பெனால்டி பகுதிக்குள் பந்தை அனுப்ப, நெய்மர் அப்பந்தைக் கோலாக மாற்றி, பிரேசிலுக்கான முதலாவது கோலைப் போட்டார்.

இந்நிலையில், 86ஆவது நிமிடத்தில் பிலிப் கூட்டின்ஹோவுக்குப் பதில் ரொபர்டோ ஃபர்மினோ களமிறங்கினார். 89ஆவது நிமிடத்திலேயே,  ஃபர்மினோ கோல் அடித்து பிரேசிலின் வெற்றியை உறுதி செய்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இறுதி 16 அணிகள் பங்கேற்கும்இ "நொக் அவுட்" சுற்றின் மற்றுமொரு போட்டியில்,  பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

பெல்ஜியம் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை,  இதனையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 48ஆவது நிமிடத்தில், ஜென்கி ஹராகுச்சி கோலடிக்க, ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.

மீண்டும் 52ஆவது நிமிடத்தில், டகாசி இனூய் கோலடிக்க, ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது. 69ஆவது நிமிடத்தில், பெல்ஜியத்தின் ஜோன் வெடோன்கென் கோலடிக்க, 2-1 என ஆனது.

மேலும் 74ஆவது நிமிடத்தில், மரவ்னி பெலாய்னி கோல் ஒன்றை அடிக்க,  2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. எனினும் இறுதி நிமிடத்தில், நாசர் ஷாட்லி கோலடிக்க, 3-2 என பெல்ஜியம் முன்னிலை பெற்றதோடு, காலிறுதிக்கான தகுதியை உறுதிப்படுத்தியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X