2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா: முன்னிலையில் அவுஸ்திரேலியா

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் 2ஆம் நாள் முடிவில், அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி முதல் இனிங்ஸில் பெற்ற 305 ஓட்டங்களுக்குப் பின்னர், தனது முதலாவது இனிங்ஸில் விளையாடிவரும் அவுஸ்திரேலிய அணி, நேற்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முதலாவது விக்கெட்டாக மற் றென்ஷோ, அணி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்த போதிலும், 2ஆவது விக்கெட்டுக்காக இணை சேர்ந்த உப தலைவர் டேவிட் வோணரும் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும் சிறப்பாக விளையாடி, 93 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

2ஆவது விக்கெட்டாக ஸ்மித் ஆட்டமிழந்த பின்னர், 3ஆவது விக்கெட்டுக்காக இணை சேர்ந்த  வோணரும் பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப்பும், இதுவரை பிரிக்கப்படாத 127 ஓட்டங்களைப் பகிர்ந்து, அணிக்குப் பலத்தை வழங்கியுள்ளனர்.

துடுப்பாட்டத்தில் டேவிட் வோணர் ஆட்டமிழக்காமல் 88, பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப் ஆட்டமிழக்காமல் 69, ஸ்டீவன் ஸ்மித் 58 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் முஸ்தபிஸுர் ரஹ்மான், தைஜுல் இஸ்லாம் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதன்படி, 8 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், பங்களாதேஷை விட 80 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கிய நிலையில், அவுஸ்திரேலியா காணப்படுகிறது.

முன்னதாக, 6 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, 305 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் முஷ்பிக்கூர் ரஹீம் 68, சபீர் ரஹ்மான் 66, நசீர் ஹொஸைன் 45, சௌமியா சர்க்கார் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் நேதன் லையன் 7 விக்கெட்டுகளையும் அஸ்டன் ஏகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தத் தொடரின் முதலாவது போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தது. தொடரைச் சமப்படுத்த வேண்டுமாயின், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய தேவை, அவுஸ்திரேலிய அணிக்குக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .