2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரேஸில் குழாமில் நெய்மர்

Editorial   / 2018 மே 15 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான பிரேஸிலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 23 பேர் கொண்ட குழாமில், இவ்வாண்டு பெப்ரவரி 25ஆம் திகதி காயமடைந்ததைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்காத பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்கள வீரரான நெய்மரும் இடம்பெற்றுள்ள நிலையில், அடுத்த மாத ஆரம்பத்தில் நெய்மர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான உடற்றகுதியையடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பரிஸ் ஸா ஜெர்மைனின் வலது பின்கள வீரர் டனி அல்விஸ் முழங்கால் காயமொன்று காரணமாக உலகக் கிண்ணத்தில் பங்குகொள்ள முடியாமல் போயுள்ள நிலையில், பிரேஸிலியக் கழகமான கொரிந்தியன்ஸின் வலது பின்கள வீரர் பக்னர், இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் வலது பின்கள வீரரான டனிலோவால் அவர் பிரதியீடு செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர, காயத்திலிருந்து அண்மையிலேயே குணமடைந்த ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்கள வீரரான பிலிப் லூயிஸும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

அந்தவகையில், எதிர்பார்க்கப்பட்ட வீரர்களே குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த காலங்களில் பிரகாசித்த டேவிட் லூயிஸ், றமாரிஸ், ஒஸ்கர், ஹல்க், அலெக்ஸ் ஸான்ட்ரோ உள்ளிட்ட வீரர்கள் குழாமில் இடம்பெறவில்லை.

தனது முதலாவது போட்டியில் அடுத்த மாதம் 17ஆம் திகதி சுவிற்ஸர்லாந்தை பிரேஸில் எதிர்கொள்கிறது.

குழாம்:

கோல் காப்பாளர்கள்: அலிஸன், எடெர்ஸன், கஸியோ.

பின்கள வீரர்கள்: டனிலோ, பக்னர், மார்ஷெல்லோ, பிலிப்பி லூயிஸ், மிராண்டா, மார்க்குயின்ஹொஸ், தியாகோ சில்வா, ஜெரோமெல்.

மத்தியகள வீரர்கள்: கஸேமீரோ, பெர்ணான்டின்ஹோ, போலின்ஹோ, றெனட்டோ அகஸ்டோ, பிரட், பிலிப் கோச்சினியோ, வில்லியன்.

முன்கள வீரர்கள்: நெய்மர், கப்ரியல் ஜெஸூஸ், றொபேர்ட்டோ பெர்மினோ, டக்ளஸ் கொஸ்டா, டைஸன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X