2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிறீமியர் லீக் பட்டத்தைப் பெற்றது சிற்றி

Editorial   / 2018 மே 07 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் சிற்றி நேற்று  தமது பிறீமியர் லீக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் சம்பியன்களான தம்மை ஏற்கெனவே உறுதிப்படுத்திக் கொண்ட மன்செஸ்டர் சிற்றி, தாம் பிறீமியர் லீக்க்கின் சம்பியன்களாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமது மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியான ஹட்டர்ஸ்பீல்ட் டெளண் அணியுடனான  நேற்று முன்தின போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்ட பின்னர் தமது கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், நடப்பு பருவகாலத்துடன் தனது முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் ஆர்சனலின் முகாமையாளர் ஆர்சீன் வெங்கர் ஆர்சனலின் மைதானத்தில் ஆர்சனலை நிர்வகிக்கும் கடைசிப் போட்டியான பேர்ண்லியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனல் ஆர்சீன் வெங்கருக்கு வெற்றிப் பிரியாவிடையை வழங்கியிருந்தது. இப்போட்டியில் ஆர்சனல் சார்பாக, பியரி எம்ரிக் அபுமெயாங் இரண்டு கோல்களையும் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, சீட் கொலாசினாக், அலெக்ஸ் இவோபி ஆகியோர் தலஆ ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற லிவர்பூலுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றிருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலிவர் ஜிரோட் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X