2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெர்கியுஸனுக்கு அவசர சத்திர சிகிச்சை

Editorial   / 2018 மே 06 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவொன்றுக்காக, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைடெட்ட்டின் முன்னாள் முகாமையாளரான அலெக்ஸ் பெர்கியூஸனுக்கு அவசர சத்திர சிகிச்சையொன்று நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அலெக்ஸ் பெர்கியூஸனுக்கான சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும் ஆனால் அலெக்ஸ் பெர்கியூஸன் மீண்டு வருவதற்கு குறிப்பிட்ட காலத்துக்கு தீவிரமாக சிககிச்சை பெற வேண்டுமென்று அறிக்கையொன்றில் மன்செஸ்டர் யுனைட்டெட் தெரிவித்துள்ளது.

1986ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராகவிருந்த 76 வயதான அலெக்ஸ் பெர்கியூஸன் 13 பிறீமியர் லீக் பட்டங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .